2011-03-28 16:44:23

லிபியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க ஆயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்


மார்ச் 28, 2011. லிபிய அரசிடமிருந்து அந்நாட்டு மக்களைக் காப்பாற்றும் நோக்குடன் ஏனைய நாடுகளுடன் இணைந்து லிபியா மீது தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்க ஐக்கிய நாடு, அந்நோக்கத்தை விட்டு விலகாமல் சரியானப் பாதையில் செல்லவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
லிபியாவில் இராணுவத் தாக்குதல் இடம்பெறுவது குறித்தக் கேள்வியை எழுப்பி அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அமெரிக்க ஆயர்களின் சர்வதேச நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ஆயர் Howard Hubbard, தீமையை அகற்றும் நோக்குடன் கையாளப்படும் இராணுவத் தாக்குதல்கள், அதை விட பெரிய தீமையைக் கொணர்வதாக இருக்கக்கூடாது என அக்கடிதத்தில் ஆயர்களின் கவலையை வெளியிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வையும் மாண்பையும் காப்பாற்ற வேண்டிய தேவையிலும் இராணுவத் துருப்புகளை எவ்வளவு தூரம் பயன்படுத்துவது என்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒழுக்க ரீதி கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆயர் Hubbard.








All the contents on this site are copyrighted ©.