2011-03-28 16:44:07

லிபிய அமைதிக்கான திருத்தந்தையின் அழைப்புக்கு Tripoli அப்போஸ்தலிக்க நிர்வாகி நன்றி.


மார்ச் 28, 2011. ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன் வர வேண்டும் என்று லிபிய தாக்குதல் குறித்து திருத்தந்தை இஞ்ஞாயிறு மூவேளை செபவுரையின்போது விடுத்த அழைப்புக்குத் தன் நன்றியை வெளியிட்டுள்ளார் லிபிய தலைநகர் Tripoli யின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenza Martinelli.
லிபியாவில் அமைதியை வலியுறுத்தி சர்வதேச அமைப்புகளுக்கும், லிபியாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கும் திருத்தந்தை முன்வைத்துள்ள இவ்வழைப்பை அரபு மொழியில் மொழிபெயர்த்து அதனை லிபிய வெளியுறவு அமைச்சருக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறினார் ஆயர் மார்த்தினெல்லி.
Tripoli கத்தோலிக்கக் கோவிலின் முன் பாதுகாப்பிற்கென காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் அறிவித்த அப்போஸ்தலிக்க நிர்வாகி, பல்வேறு தரப்புகளிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற தலத்திருச்சபை முயன்று வருகிறது என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.