2011-03-28 16:45:25

குடியேறியுள்ள மக்கள் மீது கொரிய கலாச்சாரத்தை திணிப்பது அகற்றப்பட தென் கொரிய திருச்சபை அழைப்பு.


மார்ச் 28, 2011. நாட்டிற்குள் குடியேறும் வெளிநாட்டவர்கள் கொரிய கலச்சாரத்தையே பின்பற்றவேண்டும் என்ற அரசின் கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கர்கள்.
வெளிநாட்டவர்கள் குறித்த கொரிய சட்டமானது, அவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரங்களைக் கைவிட்டு கொரிய கலாச்சாரத்தையேக் கைப்பற்றவேண்டும் என எதிர்பார்ப்பதாக குற்றம் சாட்டிய கொரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பன்மைக்கலாச்சார கல்விக்கான நிறுவனத்தின் இயக்குனர் குரு திமோத்தி கிம் மியோங் ஹியோன், மற்றவர்களின் கலாச்சாரங்கள் சகிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில் அது கிளர்ச்சிக்கு இட்டுச்செல்லக்கூடும் என எச்சரித்தார்.
கொரிய அரசின் புள்ளிவிவரங்களின்படி, அந்நாட்டில் 12 இலட்சம் வெளிநாட்டவர் வாழ்கின்றனர். தென்கொரிய திருமணங்களுள் பத்தில் ஒன்றில் தம்பதியருள் ஒருவர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.