2011-03-25 15:43:03

பாகிஸ்தானில் Paul Bhatti சிறுபான்மை மதத்தவர்க்கான சிறப்பு ஆலோசகராக நியமனம்


மார்ச்25,2011. பாகிஸ்தானில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சிறுபான்மைத்துறை அமைச்சர் Shahbaz Bhattiயின் சகோதரர் Paul Bhatti அந்நாட்டின் சிறுபான்மை மதத்தவர்க்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முழுவதும் சிறுபான்மை மதத்தவரின் விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று அந்நாட்டுப் பிரதமர், Paul Bhattiஐ நியமித்துள்ளார். இந்தப் பதவியானது அமைச்சருக்குரிய அதே அதிகாரங்களைச் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராக இருந்த Shahbaz Bhatti, தேவநிந்தனை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.