2011-03-23 16:02:51

பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கல்லறையைப் பார்வையிட்ட அமெரிக்க அரசுத் தலைவர்


மார்ச் 23,2011. இலத்தீன் அமெரிக்காவில் இச்செவ்வாய், புதன் கிழமைகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கல்லறையை இப்புதனன்று சென்று பார்வையிட்டார்.
சான் சால்வதோரில் திருப்பலி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் நினைவு நாள் மார்ச் 24 இவ்வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. 31 ஆண்டுகளுக்கு முன், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மாலை பேராயர் ரோமெரோ மருத்துவமனையோன்றில் திருப்பலி நிறைவேற்றியபோது, இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பேராயர் ரோமெரோ தென் அமெரிக்காவின் தலைசிறந்த ஒரு நாயகன் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார். ரொமேரோவின் கல்லறைக்கு அமெரிக்க அரசுத் தலைவர் செல்வது எவ்வகையிலும் அரசியல் தொடர்பான செயல் அல்ல என்று சான் சால்வதொரின் தற்போதையப் பேராயர் Jose Luis Escobar Alas கூறினார்.மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவரும், முக்கியமாக, ஒடுக்கப்பட்டோர் சார்பாகக் குரல் கொடுத்தவருமான பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கல்லறையை கறுப்பினத்தின் விடிவெள்ளியாக இருக்கும் பராக் ஒபாமா சென்று பார்த்தது பொருத்தமான ஒரு செயல் என்று பேராயர் Escobar Alas கூறினார்.







All the contents on this site are copyrighted ©.