2011-03-23 16:01:49

திருப்பீடக் குடியேற்றதாரர் அவை : ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு


மார்ச்23,2011. ஜப்பானின் வடக்கில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளது திருப்பீடக் குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கான அவை.
கடல்சார்ந்த தொழிலாளிகள் மற்றும் கடல் பயணிகளின் ஆன்மீகப் பணிக்கு முழுவதும் பொறுப்பான இந்தத் திருப்பீட அவை, இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மீனவத் தொழிலாளருக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஒரு சிறப்பு நன்கொடை அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.
கடல் சார்ந்த தொழிலாளர்க்கான மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆயர்கள், குருக்கள் துறவிகள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் இந்தச் சிறப்பு அமைப்புக்கு உதவுமாறு விண்ணப்பித்துள்ளது இந்தத் திருப்பீட அவை. தற்போது திரட்டப்படும் இந்த நிதியானது ஜப்பானில் இதற்குப் பொறுப்பான ஆயர் Michael Goro Matsuura வுக்கு நேரிடையாக அனுப்பப்படும் என்றும் இந்தத் திருப்பீட அவை யின் அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.