2011-03-23 16:03:28

திருச்சபை முயற்சிகளின் பயனாக, கியூபாவில் அரசியல் கைதிகளின் இறுதி குழுவினர் விடுவிப்பு


மார்ச் 23,2011. கத்தோலிக்கத் திருச்சபை கியூபா அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக, அரசியல் கைதிகளாக இருக்கும் இறுதி குழுவினரை விடுவிக்க அவ்வரசு ஒத்துக் கொண்டுள்ளது.
2003ம் ஆண்டு கியூபா அரசை எதிர்த்த 75 அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகள் கடுங்காவல் தீர்ப்பு அளிக்கப்பட்டனர்.
கத்தோலிக்கத் திருச்சபை அரசுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் 2010ம் ஆண்டில் பலன் தர ஆரம்பித்தது. அரசுத் தலைவர் Raul Castroவுக்கும் Havana பேராயர் கர்தினால் Jaime Ortegaவுக்கும் இடையே சென்ற ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இவ்வரசியல் கைதிகளை விடுவிக்க அரசு ஆரம்பித்தது.
இக்கைதிகளின் இறுதிக் குழுவினரை விடுவிக்க இச்செவ்வாயன்று அரசு ஒத்துக் கொண்டுள்ளது. Felix Navarro மற்றும் Jose Daniel Ferrer ஆகிய சமூகப் பணி ஆர்வலர்கள் இக்குழுவில் விடுவிக்கப்படும் முக்கியத் தலைவர்கள்.விடுவிக்கப்பட்ட பலர் இன்று ஸ்பெயின் நாட்டில் குடியேறியுள்ளனர். அவ்வரசு இவ்வரசியல் கைதிகளுக்கு அடைக்கலம் தந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.