2011-03-22 15:36:34

ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிலிப்பீனோ மக்களுக்கு டோக்கியோ கோவில்கள் உதவி.


மார்ச் 22, 2011. ஜப்பானின் அண்மை சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் வாழ் பிலிப்பினோ மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வருகின்றன டோக்கியோவிலுள்ள கத்தோலிக்க கோவில்கள்.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட சென்டெய் மற்றும் ஃபுக்குஷிமா பகுதிகளிலிருந்து தப்பிப் பேருந்து மூலம் டோக்கியோ நகரை அடைந்த பிலிப்பீனோ மக்களுக்கு அந்நகரின் இறைவார்த்தை சபையால் நடத்தப்படும் பங்கு கோவில் உட்பட மூன்று கோவில்கள் உடனடி உதவிகளை வழங்கி அடைக்கலமும் தந்துள்ளன.
இதற்கிடையே, ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென நிதி திரட்டல் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது பிலிப்பீன்ஸ் தலத்திருச்சபை.
அண்மை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கும், ஜப்பான் வாழ் பிலிப்பீனோ மக்களுக்கும் உதவுவதற்கென இத்தவக்கால நிதி திரட்டல் ஒன்றிற்கும் விண்ணப்பித்துள்ளார் மணிலா துணை ஆயர் Broderick Pabillo.








All the contents on this site are copyrighted ©.