2011-03-21 15:31:05

பக்கவாத நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என்கிறது ஜப்பான் ஆய்வு ஒன்று.


மார்ச் 21, 2011. பக்கவாத நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பக்கவாத நோய் பாதித்த நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களில் 24 மற்றும் அதற்கு குறைவான பற்கள் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும், அதே வேளையில் இதே வயதுடைய அதிக பற்கள் உள்ளவர்களுக்கு பக்கவாதம் நோய் பாதிப்பு அதிக அளவில் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
எனவே பற்களைப் பாதுகாப்பதன் மூலம் அந்த நோயில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பற்கள் தவிர உடல் பருமன் மற்றும் மது குடித்தல் போன்றவற்றினாலும் பக்கவாத நோய் தாக்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.