2011-03-19 15:31:56

மார்ச் 20, வாழந்தவர் வழியில்...


சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் 1911ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி மெக்சிகோ நாட்டின் Zamoraவில் பிறந்தவர் Alfonso Garcia Robles.
சட்டப்படிப்பை முடித்த இவர், தனது 28வது வயதில் அயல்நாட்டுப் பணித்துறையில் இணைந்தார். ஐ.நா.அமைப்பை உருவாக்கிய சான் பிரான்சிஸ்கோ கருத்தரங்கில் மெக்சிகோவின் பிரதிநிதியாக இவர் பங்கேற்றார். தனது 65வது வயது வரை மெக்சிகோவின் வெளிநாட்டுத் தூதராகவும், ஐ.நா.பிரதிநிதியாகவும் பணிபுரிந்தார்.
இலத்தீன் அமெரிக்காவும், கரிபியன் தீவுகளும் அணு ஆயுதங்கள் அற்றப் பகுதிகளாக உருவாக வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டு, Tlatelolco ஒப்பந்தம் 1967ல் நிறைவேறுவதற்காக அரும்பாடு பட்டார்.உலக அமைதிக்கென இவர் மேற்கொண்ட பல முயற்சிகளைக் கௌரவிக்கும் வகையில் உலக அமைதிக்கான நொபெல் பரிசு 1982ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளின் நூறாம் ஆண்டு இவ்வாண்டு மார்ச் 20 நிறைவு பெறுகிறது.







All the contents on this site are copyrighted ©.