2011-03-18 15:56:08

லிபியா குறித்து மேற்கத்திய நாடுகள் ஆலோசனை


மார்ச்18,2011. லிபிய அதிபர் Muammar Gaddafi ன் தாக்குதல்களிலிருந்து அப்பாவி பொது மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ஐ.நா.பாதுகாப்பு அவை ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, லிபியா வான்வெளியில் விமானங்கள் பறப்பதைத் தடை செய்வது குறித்து மேற்கத்திய நாடுகள் விவாதித்து வருகின்றன.
தனக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு பென்காசியில் தாக்குதலை நடத்துவதாக கடாஃபி அறிவித்துள்ளதையொட்டி ஐ.நா.பாதுகாப்பு அவை இவ்வியாழன் இரவு இத்தீர்மானத்தை நிறைவேற்றியது.
லிபியா மற்றும் டுனிசியா எல்லைப்புறத்தில் 15 ஆயிரத்துக்கு அதிகமான சூடான உணவுப் பொட்டலங்களைத் தினமும் வழங்கி வருகிறது உலக உணவு திட்ட அமைப்பு.
கடந்த மாதத்தில் சுமார் 3 இலடச்ம் குடியேற்றதாரப் பணியாட்கள் லிபியாவை வி்டடு வெளியேறி இருக்கின்றனர்.
இதற்கிடையே, உடனடியாக போரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.நா., கொள்கைகளை லிபியா மதித்து நடக்கும் எனவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.