ஜப்பான் மக்களுக்காக அயர்லாந்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும்,
திருப்பலியும்
மார்ச் 16,2011. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஜப்பான் மக்களுக்காக அயர்லாந்தில்
உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், திருப்பலியும் மேற்கொள்ளப்பட வேண்டும்
என்று அயர்லாந்து கர்தினால் Seán Baptist Brady மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு
நாளும் தனிப்பட்ட வகையிலும், குடும்பமாகவும், பங்குத் தளங்களிலும் நாம் மேற்கொள்ளும்
செபங்களை ஜப்பான் மக்களுக்காக, சிறப்பாக அங்குள்ள குழந்தைகளுக்காக எழுப்புவோம் என்று
அயர்லாந்து ஆயர் பேரவையின் சார்பில் அனைத்து பங்குகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள மடல் கூறுகிறது.இத்தருணத்தையொட்டி,
ஆயர் பேரவை ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பு செபங்களை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் பயன்படுத்துமாறு, இச்செபம் ஒரு வீடியோ பதிவாகவும் வெளியாகியுள்ளதென்று
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.