2011-03-15 15:45:10

FAO எச்சரிக்கை : வெப்பநிலை மாற்றத்தால் 75 விழுக்காட்டு பலவகையான உணவுப் பொருட்களின் அறுவடைகள் மறையும் அபாயம்


மார்ச்15,2011: 1900 மற்றும் 2000மாம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகின் வெப்பநிலை மாற்றத்தால் 75 விழுக்காட்டு பலவகையான அறுவடைகள் மறைந்து விட்டன என்று FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
வேர்கடலை, உருளைக்கிழங்கு, பயிறு வகைகள் போன்ற முக்கிய உணவு வகைகளில் 22 விழுக்காடு வெப்பநிலை மாற்றத்தால் 2055ம் ஆண்டுக்குள் மறையக்கூடும் என்றும் FAO எச்சரித்தது.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் வேளாண்துறை மற்றும் மூத்த அதிகாரிகள் கடந்த வாரத்தில் நடத்திய கூட்டத்தில் இதனை அறிவித்தது FAO நிறுவனம்







All the contents on this site are copyrighted ©.