2011-03-12 15:21:26

மார்ச் 13, வாழந்தவர் வழியில்...


சூரியனைச் சுற்றி வரும் யுரேனஸ் (Uranus) என்ற ஏழாவது கோளம் 1781ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொலைநோக்குக் கருவியின் (Telescope) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளம் யுரேனஸ் என்று சொல்லப்படுகிறது. இதைக் கண்டுபிடித்து அறிவித்தவர் சர் வில்லியம் ஹெர்ஷெல் (Sir William Herschel). இவரது கண்டுபிடிப்பால் சூரியனைச் சுற்றி வரும் கோளங்கள் பற்றிய அறிவு விரிவடைந்தது. சூரியனிலிருந்து மூன்றாவது கோளமாய்ச் சுற்றி வரும் பூமியில் வாழும் நாம், எல்லைகளற்ற விண்வெளியைப் பற்றி எவ்வளவுதான் நம் அறிவை வளர்த்துக்கொண்டாலும், அதைவிட இன்னும் பல மடங்கு விரிந்தது இந்த விண்வெளி. வில்லியம் ஹெர்ஷெல்லின் கண்டுபிடிப்பு நம் அறிவியல் தொடுவானத்தை இன்னும் சிறிதளவு தள்ளி வைத்தது.







All the contents on this site are copyrighted ©.