2011-03-12 15:14:10

மத்ரித் உலக இளையோர் தின நிகழ்வுகள் சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் பாதகம் ஏற்படாவண்ணம் இடம் பெறும்


மார்ச் 12,2011: வருகிற ஆகஸ்டில் மத்ரித்தில் உலக இளையோர் தின நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் பாதகம் ஏற்படாவண்ணம் அனைத்தும் இடம் பெறும் என்று இவ்விழாத் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பூமியை வருங்காலத் தலைமுறைக்கு நல்ல நிலையில் வைக்க வேண்டுமென்பதே ஒவ்வொரு கிறிஸ்தவனின் அக்கறையாக இருக்கின்றது என்று இந்தத் திட்ட இயக்குனர் Eva Latonda அறிவித்தார்.
ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மத்ரித்தில் வருகிற ஆகஸ்ட் 16 முதல் 21 வரை உலக இளையோர் தினம் நடைபெறுகின்றது








All the contents on this site are copyrighted ©.