2011-03-11 16:38:04

அமெரிக்காவில் புற்றுநோயாளிகள் அதிகம் : ஆய்வில் தகவல்


மார்ச் 11,2011. அமெரிக்காவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம், நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் ஆகியன இணைந்து 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில், 2001-ம் ஆண்டு புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 9.8 விழுக்காட்டிலிருந்து 2007ம் ஆண்டில் 11.07 விழுக்காடாக அதிகரித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 65 வயதைக் கடந்த ஆண்கள், பெண்கள் புற்றுநோயினால் அவதியுறுகின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.மேலும் 54 விழுக்காட்டுப் பெண்கள் மார்பு புற்றுநோயினால் அவதியுறுகின்றனர். இது தவிர 47 இலட்சம் மக்கள் பல்வேறு நோய்க் கொடுமையினால் வாழ்ந்து வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.