2011-03-10 15:44:40

தெற்கு ஆசிய இயேசு சபையினர் உலகளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - இயேசுசபைத் தலைவர் Adolfo Nicolas


மார்ச் 10,2011. உலகளாவிய இயேசுசபையின் பணிகளை மனதில் கொண்டு தெற்கு ஆசியாவில் உள்ள இயேசுசபையினர் உலக அளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென்று இயேசுசபைத் தலைவரான அருள்தந்தை Adolfo Nicolas கூறினார்.
பிப்ரவரி 26 முதல் வருகிற சனிக்கிழமை மார்ச் 12 வரை இந்தியாவின் பல பகுதிகளில் பயணங்கள் மேற்கொண்டுள்ள இயேசு சபைத் தலைவர் Nicolas, அண்மையில் தெற்கு ஆசிய இயேசுசபை மாநிலத் தலைவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
குருக்களின் ஒருங்கிணைந்த, முழுமையான பயிற்சிகளில் திருச்சபைக்கு இயேசு சபையினர் உதவிகள் செய்வதை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எதிர்பார்க்கிறார் என்பதை எடுத்துரைத்த அருள்தந்தை Nicolas, திருச்சபை அளித்துள்ள இந்த உலகளாவிய பணிக்கு தெற்காசிய இயேசு சபையினரின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.உலகின் 113 நாடுகளில் பரவியுள்ள 18,500 இயேசு சபையினரில், தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் 4,000க்கும் அதிகமான இயேசு சபையினர் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.