2011-03-08 16:15:07

ஐம்பதாவது சர்வதேச திருநற்கருணை மாநாட்டிற்கானத் திட்டங்களை அயர்லாந்து திருச்சபை வெளியிட்டுள்ளது


மார்ச்08,2011. 2012ம் ஆண்டு ஜூன் 10 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஐம்பதாவது சர்வதேச திருநற்கருணை மாநாட்டிற்கானத் திட்டங்களை வெளியிட்டுள்ளனர் அயர்லாந்து கத்தோலிக்கத் தலைவர்கள்.
டப்ளின் ராயல் கழகம் உட்பட அந்நகரின் பல்வேறு இடங்களில் இம்மாநாடு நடைபெறும். இதன் நிறைவுத் திருப்பலி டப்ளின் Croke பூங்காவில் இடம் பெறும் எனவும் இதில் சுமார் 80 ஆயிரம் விசுவாசிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உலக மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கானப் பதிவுகள் வரும் மாதத்தில் தொடங்கப்படும் என்று இம்மாநாட்டின் பொது நிர்வாகி Anne Griffin கூறினார்.
"திருநற்கருணை :கிறிஸ்துவோடும் ஒருவர் ஒருவரோடும் ஐக்கியம்" என்ற தலைப்பில் இந்த 50 வது சர்வதேச மாநாடு நடைபெறுகின்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் இச்சர்வதேச திருநற்கருணை மாநாடு, ஆசியாவில் மணிலா, மும்பை, செயோல் ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற்றுள்ளது.
இத்தகைய உலக மாநாடு அயர்லாந்தில் 1932ல் ஏற்கனவே ஒருமுறை நடைபெற்றுள்ளது.







All the contents on this site are copyrighted ©.