2011-03-08 16:14:15

இலங்கையில் அகதிகளு்ககும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் காரித்தாஸ் உதவி


மார்ச்08,2011. இலங்கையில் அகதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், குறிப்பாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் போரினாலும் வெள்ளத்தாலும் கடுமையாயப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சிறாரின் நலனில் இலங்கை காரித்தாஸ் முக்கிய கவனம் எடுத்துச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்ட இலங்கை காரித்தாஸ் இயக்குனர் அருட்திரு ஜார்ஜ் சிகாமணி, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி, அமைதியை ஏற்படுத்துதல், குணப்படுத்துதல், ஒப்புரவு ஆகிய பணிகளில் காரித்தாஸ் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக அறிவித்தார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் 500 முதல் 600 வீடுகள் கட்டும் திட்டமும் இதில் உள்ளடங்கும் என்றும் அக்குரு கூறினார்.
அண்மையில் வெளியான புள்ளி விபரங்களின்படி, 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த போரினால், மூன்று இலட்சத்து 27 ஆயிரம் பேர் இன்னும் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எவ்வித உதவியும் பாதுகாப்பும் இன்றி ஒரு இலட்சத்து 95 ஆயிரம் பேர் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.