2011-03-07 15:38:19

எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்.


மார்ச் 07, 2011. எகிப்தின் Soul என்ற நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் காப்டிக் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு குருவும் மூன்று தியாக்கோன்களும் காணாமற்போயுள்ளனர்.
காப்டிக் கிறிஸ்தவ ஆண் ஒருவர், ஓர் இஸ்லாமியப் பெண்ணை விரும்பி அவரோடு பழகியதைத் தொடர்ந்து இதனால் கோபமுற்ற Soul நகரின் ஏறத்தாழ 4000 இஸ்லாமியர் ஒன்றிணைந்து கடந்த வெள்ளி இரவில், கிறிஸ்தவ வீடுகளைத் தாக்கியதுடன் அந்நகரின் புனிதர்கள் மினா மற்றும் ஜார்ஜ் கோவிலை தீயிட்டுக் கொளுத்தினர்.
இக்கோவிலில் வசித்து வந்த குரு யோஷாவும் மூன்று தியாக்கோன்களும் தீயில் கருகி இறந்தார்களா அல்லது இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டுள்ளார்களா என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை என அப்பகுதி கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு 30 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இந்நகரில் 12,000 கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் தற்போது காவல்துறையால் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.