2011-03-05 14:21:32

கரீபியன் நாடுகளில் ஆயுதப் புழக்கத்தை நிறுத்துவதற்குக் கானடாவிலுள்ள கிறிஸ்தவ சபைகள் நடவடிக்கை


மார்ச்05,2011. கரீபியன் நாடுகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பெருமளவாகப் புழக்கத்தில் இருப்பதை நிறுத்துவதற்கான கானடா அரசின் முயற்சிகளுக்கு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளும் தங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளன.
வெளிப்படையாக நடைபெறும் சில போர்களில் இடம் பெறும் இறப்புக்களைவிட துப்பாக்கி வன்முறையால் ஜமெய்க்கா நாட்டில் அதிகமான பேர் இறக்கின்றனர் என்றுரைத்தக் கானடாவிலுள்ள கிறிஸ்தவ சபைகள் அவை இயக்குனர் John Siebert, ஒரு இலட்சம் ஜமெய்க்கா மக்களுக்கு ஆறு பேர் வீதம் கொல்லப்படுகின்றனர், இவர்களில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கிக்குப் பலியாகின்றனர் என்றார்.
கரீபியன் நாடுகளில் ஆயுதப் புழக்கத்தை நிறுத்துவதற்கென, கானடா வெளிவிவகாரத் துறை மற்றும் சர்வதேச வணிகத் துறையின்கீழ் 24 இலட்சம் டாலர் கொண்ட மூன்றாண்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.