2011-03-03 15:19:08

மார்ச் 04 - வாழ்ந்தவர் வழியில்.....


1394ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி பிறந்தவர் கடல்வழி வல்லுனர் ஹென்ரி. போர்த்துக்கல் அரசர் முதலாம் ஜானின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த ஹென்ரி, தமது சாக்ரெஸ் தீபகற்பத்தில் கடற்பயணத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் கடல்வழிப்பாதை வரைபடம் அமைப்பவர்களுக்கெனப் பள்ளி ஒன்றை நடத்தினார். மௌரித்தானியா கடற்கரைப் பகுதிக்கு ஆட்களை அனுப்பி அந்தக் கடற்கரை குறித்த வரைபடத்தை அமைக்கத் தூண்டினார். இந்த நவீன காலத்தில் இருப்பது போல இந்த வல்லுனர்களுக்கென அறிவியல் ஆய்வுக் கூடமோ அல்லது இவர்களுக்கான அமைப்பு முறையோ அன்று இல்லை. ஹென்ரி இளவரசராக இருந்த போதிலும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவர், பேராசை இல்லாதவர், இதமாகப் பேசுபவர், தன்னிடம் வரும் எந்த ஏழையையும் வெறுங்கையாய் அனுப்பாதவர் என்றெல்லாம் இவரைக் குறித்த குறிப்புகள் கூறுகின்றன. ஆப்ரிக்கக் கடற்கரை குறித்தக் கண்டுபிடிப்புகளைத் தொடங்கியவர். அச்சமயத்தில் ஐரோப்பியர்களுக்கு இந்தக் கடற்கரையின் பெரும் பகுதி தெரியாமலே இருந்தது. மேற்கு ஆப்ரிக்கத் தங்க வியாபாரத்திற்கும் காரணமாக இருந்தவர். ஹென்ரியின் நாடுகாண் குழுவைச் சேர்ந்த Alvise Cadamosto என்பவர் 1455க்கும் 1456க்கும் இடைப்பட்ட நாட்களில் பல கேப் வெர்தே தீவுக்கூட்டங்களைக் கண்டுபிடித்தார்.
பெரியோர் சொல்கின்றனர் - மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகச் செய்யப்படும் செயலே சேவை என்று.







All the contents on this site are copyrighted ©.