2011-03-02 15:34:57

இந்தியாவில் ஐந்து மாதங்களில் 5,000 சிறுவர்கள் விற்பனை


மார்ச் 02,2011. இந்தியாவில் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட சிறுவர்கள் விற்பனையாவது அதிகரித்து வரும்வேளை, ஐந்து மாதங்களில் 5,000 சிறுவர்கள் விற்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கொச்சி மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் 7 வயது முதல் 11 வயதிற்குட்பட்ட நிறையச் சிறுவர்கள், வீடுகள், உணவகங்கள், விடுதிகள், கடைகள் போன்றவற்றில் பணி செய்து வருகின்றனர்.
ஆந்திரா, மேற்கு வங்கம், அசாம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஐந்து மாதங்களில் மட்டும் 5,000 சிறுவர்கள் கொச்சியில் விற்கப்பட்டுள்ளதாகச் சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.கேரளாவில் குழந்தைகளைத் தத்து எடுத்தல் என்பதை அம்மாநில அரசு கடுமையாக்கி விட்டதால், அங்கு பிற மாநிலங்களில் இருந்து சிறுவர்களைக் கொண்டு வந்து தத்து எடுத்தும் வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.