2011-03-01 16:07:56

டார்பூரில் திருவிவிலியங்களை விநியோகித்தார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு CRSன் பணிகள் நிறுத்தி வைப்பு


மார்ச்01,2011. ஆப்ரிக்க நாடான சூடானின் டார்பூர் மாநிலத்தின் மேற்கில் திருவிவிலியங்களை விநியோகித்தார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு CRS என்ற கத்தோலிக்க மனிதாபிமான நிறுவனத்தின் பணிகளை சூடான் அரசு நிறுத்தி வைத்துள்ளது என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
டார்பூர் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக இடம் பெற்ற கடும் மோதல்கள், உலகின் கடும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கும் பகுதிகளில் ஒன்றாக அதனை மாற்றியிருக்கின்றது.
இச்சூழலில், அப்பகுதியில் வெளிநாட்டு மனிதாபிமான நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளில் தற்போதைய நடவடிக்கை கடைசியானதாக இருக்கின்றது என்று அவ்வதிகாரி தெரிவித்தார்.
டார்பூர் பகுதியில் இடம் பெற்ற மோதல்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் இறந்தனர் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.