2011-03-01 16:11:18

சிலே நாட்டிற்கு “சர்வதேச மனித வாழ்வுப் பாதுகாப்பு” விருது


மார்ச்01,2011. இலத்தீன் அமெரிக்காவில், குழந்தை பிறப்பின் போது இறக்கும் தாய்மாரின் எண்ணிக்கையை மிகக் குறைந்த அளவில் கொண்டிருக்கும் சிலே நாட்டிற்கு “சர்வதேச மனித வாழ்வுப் பாதுகாப்பு” விருது வழங்கப்பட்டுள்ளது.
மனித வாழ்வுக்கு ஆதரவான நிறுவனங்களின் சுமார் முப்பது பிரதிநிதிகள் இந்த விருதை ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடமிருந்து கடந்த வியாழனன்று பெற்றுக் கொண்டனர்.
கடந்த பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து இந்த மார்ச் 4 வரை நியுயார்க்கில் நடை பெற்று வரும் பெண்கள் நிலை பற்றிய ஐ.நா.கூட்டத்தில் இவ்விருது வழங்கப்பட்டது.
மனித வாழ்வுக்கு ஆதரவானத் தலைவர்கள் சார்பில் பேசிய Dan Ziedler, தென் அமெரிக்க நாடான சிலேயில் எந்தச் சூழ்நிலையிலும் கருக்கலைப்பு அனுமதிக்கப்படவில்லை என்றும் சிலே நாடு தாய் மற்றும் குழந்தையின் வாழ்வை மதிக்கின்றது, சிலேயில் சட்டத்தின்கீழ் தாயும் குழந்தையும் சமம் என்றும் தெரிவித்தார்.
சிலே நாட்டில் 1957க்கும் 2008க்கும் இடைப்பட்ட 51 ஆண்டுகளி்ல் கர்ப்பம் சார்ந்த தாய்மாரின் இறப்பு 97.6 விழுக்காடு குறைந்துள்ளது.
அந்நாட்டில் 1989ல் கருக்கலைப்பு சட்டப்படி தடைசெய்யப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 13.62 என்ற விகிதத்திலிருந்து 1.65 விகிதமாகக் குறைந்துள்ளது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.