2011-03-01 16:04:49

கோத்ரா இரயில் நிலைய தீர்ப்பு குறித்து கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அதிர்ச்சி


மார்ச்01,2011. இந்தியாவின் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் பெட்டி எரிக்கப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் இச்செவ்வாயன்று விதிக்கப்பட்டுள்ள வேளை, இக்குற்றத்தில் உண்மையிலேயே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்று குறை கூறினார் பரோடா ஆயர் Godfrey de Souza.
இத்தீர்ப்பு குறித்து கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அதிர்ச்சியடைந்துள்ளவேளை, குற்றமற்றவர்களுக்கு இத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் மாநில அரசு உண்மையான குற்றவாளிகளை மறைக்க முயற்சிக்கின்றது என்று மேலும் குறை கூறினார் ஆயர் டி சூசா.
2002ம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தின் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட. நிகழ்வில் 59 பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சாதுக்கள். இந்தத் தீ வைப்பைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் நடந்த மதக் கலவரத்தால் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இசுலாமியர்.
இந்த வழக்கில் முன்னதாக இந்த பிப்ரவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது மற்றும் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கானத் தண்டனை விவரம் இச்செவ்வாயன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.







All the contents on this site are copyrighted ©.