2011-02-28 15:29:23

மார்ச் 01 வாழ்ந்தவர் வழியில் .....


தாய் மண்ணில் அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து அன்று தொட்டு இந்நாள்வரை போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. அதற்காக உயிரையேத் தியாகம் செய்யும் தேசப் பற்றாளர்கள் வரிசையில் நிற்பவர் அரசி பேகம் ஹசரத் மஹல். இவர் அயோத்தி மன்னர் வஸீர் அலியின் மனைவி. 1856ல் பிரித்தானியர் அயோத்தியைத் தங்களது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தனர். அச்சமயம் பேகம் ஹசரத் மஹல் தனது 11 வயது மகனுடன் லக்னோவில் தங்கியிருந்தார். 1858ம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதியன்று பிரித்தானியர் நேபாளத்தின் ஜங்பகதூர் தலைமையில் முப்பதாயிரம் படைவீரருடன் லக்னோ வந்து போரிட்டு லக்னோவையும் கைப்பற்றினர். அப்போது பிரித்தானிய அரசு, “இனிமேல் ஆக்ரமிப்பு எதுவும் நடக்காது. புரட்சியாளருக்கு மன்னிப்பு வழங்கப்படும். அரசி பேகம் ஹசரத் மஹல் சரணடைந்தால் கௌரவத்துடன் நடத்தப்படுவார். ஓய்வூதியமும் வழங்கப்படும்” என்று வெளிப்படையாக ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட அரசி, “பிரித்தானியரை நம்பி ஏமாற வேண்டாம்” என்று மக்களுக்குச் சொல்லி 1858ல் போருக்குப் புறப்பட்டார். ஆயினும், அரசி பேகம் ஹசரத் மஹலைச் சரணடைய வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரியது பிரித்தானிய அரசு. எந்த நிலையிலும் தான் சரணடையத் தயாராக இல்லை என்று மறுத்து விட்டார் பேகம் ஹசரத் மஹல்.
பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார் : “வருவதைக் கண்டு மயங்காதே. போவதைக் கண்டு கலங்காதே” என்று.







All the contents on this site are copyrighted ©.