2011-02-26 16:03:46

வட கொரிய மக்கள் பசிக்கொடுமையால் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடுகின்றனர்


பிப்.26,2011. வட கொரியாவில் மக்கள் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடும் அளவுக்கு மிகவும் மனம் சோர்ந்து பசிச் சாவை எதிர் நோக்குகின்றனர் என்று அந்நாட்டிற்குச் சென்று திரும்பியுள்ள அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களின் கடும் குளிரால் அந்நாட்டில் பயிரிடப்பட்ட கோதுமை மற்றும் பார்லி விளைச்சல் 50 முதல் 80 விழுக்காடு வரை சேதமாகியுள்ளது என்று அவ்வமைப்புகள் கூறின.
வட கொரியாவின் தற்போதைய அவலம் பொது மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் மற்றும் பெருமளவில் மக்கள் தென் கொரியாவுக்கு புலம் பெயரலாம் என்றும் அவ்வமைப்புகள் கூறின.
பெருமளவானப் புலம் பெயர்வுகள் தென் கொரியாவில் தாக்கு பிடிக்காது என்றும் அந்நாடு அவர்களைத் திருப்பி அனுப்பக்கூடும் என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன







All the contents on this site are copyrighted ©.