2011-02-23 16:45:36

கருக்கலைப்புக்கு ஆதரவான மசோதா குறித்த அரசுடனானப் பேச்சுவார்த்தையை பிலிப்பைன்ஸ் ஆயர்கள் நிறுத்தி வைப்பு


பிப்.23,2011. பிலிப்பைன்சில் கருக்கலைப்புக்கு ஆதரவான மசோதா குறித்து அந்நாட்டு அரசுடன் நடத்துவதாய்த் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் திருச்சபை மற்றும் வாழ்வுக்கு ஆதரவான குழுக்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து குடும்பக் கட்டுப்பாடு குறித்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அது செனட் அவையிலும் விரைவில் அங்கீகரிக்கப்பட்டு அரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இந்த விவகாரம் குறித்து பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar அரசுத்தலைவர் அக்குய்னோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த மசோதா நாட்டின் இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேகத்தைப் பார்க்கும் போது இது குறித்த பேச்சுவார்த்தையை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதே விவேகமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா துரிதமாக அங்கீகரிக்கப்பட்டால் இதனைச் செயல்படுத்துவதற்கெனப் பிலிப்பைன்ஸ் அரசுக்கு 90 கோடி டாலர் நிதியுதவி செய்வதற்கு US Aid என்ற அமெரிக்க அமைப்பு உட்பட வெளிநாட்டு குழுக்கள் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக HLI என்ற சர்வதேச மனித வாழ்வு அமைப்பு கூறியது







All the contents on this site are copyrighted ©.