2011-02-21 15:38:52

பிப்ரவரி 22 வாழ்ந்தவர் வழியில் .....


ஜார்ஜ் வாஷிங்டன். இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் குடியரசுத் தலைவர். 1789ம் ஆண்டு முதல் 1797 ம் ஆண்டு வரை அரசுத் தலைவராகப் பணியாற்றிய இவர், அந்நாட்டின் தந்தை எனப் போற்றப்படுகிறார். 1775ம் ஆண்டு முதல் 1783ம் ஆண்டு வரை நடைபெற்ற அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் பிரித்தானியரை வீழ்த்தினார். இந்தச் சுதந்திரப் போராட்டத்திற்குத் தனது படைவீரர்களை வழிநடத்திச் சென்ற சமயம் பனிப் பகுதியில் தொடர்ந்து நடந்து வந்ததால் வீரர்கள் சோர்வுடன் காணப்பட்டனர். காலில் இரத்தம் வடிய வடியப் பல வீரர்கள் நடந்து வந்தனர். இதனைக் கண்ட வாஷிங்டன் மனம் தளர்ந்து போகவில்லை. கடவுளிடம் நம்பிக்கையுடன் மன்றாடினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அந்த விடுதலைப் போரில் வெற்றியும் பெற்றார். 1732ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பிறந்த ஜார்ஜ் வாஷிங்டன் 1799ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி இறைபதம் அடைந்தார். இவர் சொல்லியிருக்கிறார்......

- கடவுளும் திருவிவிலியமும் இன்றி நாட்டை சரியாக ஆட்சி செய்வது இயலாதது

- நண்பர்களைக் கொண்டிருப்பதற்கு வார்த்தைகள் அல்ல, செயல்களே உண்மையான கூறுகள் என்பதை உலகம் ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்த்த வேண்டும்.

- நீ உனது புகழை மதித்தால் நல்ல பண்புள்ள மனிதர்களோடு தொடர்பை வைத்திரு. தீயவர் குழுவுடன் இருப்பதைவிட தனியாக இருப்பது மேல்.

- எல்லாரிடமும் மரியாதையுடன் நடந்து கொள். சிலரோடு நெருக்கமாக இரு. இந்தச் சிலர் மீது நீ நம்பிக்கை வைப்பதற்கு முன்னர் அவர்கள் அதற்குத் தகுதியானவர்களா? என்பதை நன்றாகப் பரிசீலனை செய்.








All the contents on this site are copyrighted ©.