2011-02-21 15:30:45

தெற்கு ஆஸ்திரேலியாவின் கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.


பிப் 21, 2011. தெற்கு ஆஸ்திரேலியாவின் கத்தோலிக்கப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2005ம் ஆண்டில் கத்தோலிக்கப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 46,665 ஆக இருக்க, அது 2010ம் ஆண்டில் 48,783 ஆக உயர்ந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்குள் புதிதாக நுழையும் குழந்தைகள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்வோருக்கு கத்தோலிக்கப் பள்ளிகளில் முதலிடம் கொடுக்கப்படுவதாக உரைத்த தெற்கு ஆஸ்திரேலிய கத்தோலிக்கக் கல்வியின் துணை இயக்குனர் மோனிக்கா கோன்வே, மாணவர்களுக்கான பாடங்கள், அரசின் பாடத்திட்டங்களுக்கு இயைந்த வகையிலும் கத்தோலிக்க மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகவும் தயாரிக்கப்படுகின்றன என்றார்.








All the contents on this site are copyrighted ©.