2011-02-19 15:59:44

பிப்ரவரி 20, வாழந்தவர் வழியில்...


பிரெஞ்ச் நாட்டில் ஒரு செல்வக் குடும்பத்தில் 687 ம் ஆண்டு பிறந்தவர் Eucherius. அவருக்கு வழங்கப்பட்ட Eucherius என்ற பெயரிலேயே நன்றியறிதல் என்ற பொருள் உள்ளது. இவர் பிறந்ததும் இவரது பெற்றோர் இவரைக் கடவுளுக்குச் சிறப்பு காணிக்கையாக்கினர். தனது 27வது வயதில் இவர் துறவு நிலை பூண்டார். கடுந்தவங்கள் மேற்கொண்டார். 34வது வயதில் இவர் ஆயராக தெரிவு செய்யப்பட்டபோது, தன்னை அந்தப் பதவியிலிருந்து தன் சகோதரத் துறவிகள் காக்க வேண்டும் என்று வேண்டினார். ஆனால், அவர்கள் பொதுநலனை மனதில் கொண்டு, ஆயராக பொறுப்பேற்க Eucheriusஐ அனுப்பி வைத்தனர்.
அவரை ஆயராக நியமித்த அரசன் Charles Martel கோவில் சொத்துக்களை அபகரித்து, தன் சொந்த செலவுகளுக்கும், போர்ச் செலவுகளுக்கும் பயன்படுத்தியதை ஆயர் Eucherius வன்மையாகக் கண்டித்தார். எனவே அரசர் இவரை நாடு கடத்தினார். இவர் மீண்டும் ஒரு துறவு மடத்தில் சேர்ந்து கடுந்தவங்களிலும், செபங்களிலும் வாழ்வைக் கழித்தார். 743ம் ஆண்டு பிப்ரவரி 20ம் நாள் தனது 56வது வயதில் இறையடி சேர்ந்தார்.







All the contents on this site are copyrighted ©.