2011-02-19 16:24:39

நோயாளிகள் மீதான முன்னாள் திருந்தந்தையின் அக்கறை.


பிப் 19, 2011. விசுவாச ஒளியில் நோயுடன் வாழ்வதன் சாட்சியாக இருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்படுவதற்கான தாயாரிப்புகள் இடம்பெறும் இவ்வேளையில், அவரே பிப்ரவரி மாதத்தில் திருச்சபையில் நோயாளர் தினம் சிறப்பிக்கப்படும் முறையைக் கொணர்ந்தார் என்பதை நினைவூட்டினார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.

வாரந்தோறும் தொலைக்காட்சியில் தான் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்ட குரு லொம்பார்தி, திருத்தந்தை 2ம் ஜான் பால் நோயாளிகள் மற்றும் நம் மீதான அக்கறையுடன் வாழ்ந்ததே அவரின் புனிததன்மை குறித்த உறுதிப்பாட்டை நமக்குத்தருவதாக உள்ளது என்றார். இயேசுவின் சிலுவையைத் தாங்கியவராய் ஒவ்வொரு நோயாளிக்காகவும் பரிந்து பேசுபவராக திருத்தந்தை ஜான் பால் இருந்தார் என்ற இயேசு சபை குரு லொம்பார்தி, அன்பின் ஆழத்தை புரிந்து கொண்டு, அதனை வாழ்ந்து மனித நேயத்தில் வளர்வோம் என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.