2011-02-19 16:24:07

உரோம் வாழ் பிலிப்பீன்ஸ் குருக்களுக்கான திருத்தந்தையின் உரை.


பிப் 19, 2011. உரோம் நகரில் வந்து பயிலும் குருக்களுக்கான பயிற்சி என்பது கல்வியை மட்டும் சார்ந்ததில்லை மாறாக, உரோம் நகரின் வாழும் வரலாறு மற்றும் அங்கு மடிந்த மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டுகளால் ஆன்மீகமுறையில் உருவாக்கப்படுவதையும் சார்ந்துள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகரில் உள்ள பிலிப்பீன்ஸ் நாட்டுக் குருக்களுக்கான இல்லம் தன் 50ம் ஆண்டைச் சிறப்பிப்பதை முன்னிட்டு அவ்வில்லத்தில் வாழும் குருக்களை இச்சனியன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, அவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்தும் அதேவேளை, உரோம் நகரில் வாழும் பிலிப்பீன்ஸ் சமுதாயத்தின் மறைப்பணித் தேவைகளிலும் தனி அக்கறைக்காட்டி செயல்படவேண்டும் என விண்ணப்பித்தார். ஒவ்வொரு குருவும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்பயிற்சிக் காலத்தைப் பயன்படுத்தி ஆன்மீக மற்றும் இறையியல் துறைகளில் சிறப்புப் பெற்றவர்களாய் நாடு திரும்பி தலத்திருச்சபை மற்றும் அகில உலக திருச்சபையின் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டியதையும் உரோம் வாழ் பிலிப்பீன்ஸ் குருக்களுடனான தன் சந்திப்பின் போது குறிப்பிட்டார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.