2011-02-16 16:08:14

கந்தமால் பகுதியில் அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு ஒரிஸ்ஸா அரசு 3,70,000 அமெரிக்க டாலர்கள் வழங்க முடிவு


பிப்.16,2011. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு ஒரிஸ்ஸா அரசு 3,70,000 அமெரிக்க டாலர்கள், அதாவது, 1,66,50,000 ரூபாய் நிதியை வழங்கத் தீர்மானித்துள்ளது.
தலத்திருச்சபைத் தலைவர்களும், 2008ம் ஆண்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களும் அரசு அதிகாரிகளுடன் அண்மையில் நடத்திய ஒரு சந்திப்பின் விளைவாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதென ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அழிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட அரசு இதுவரை பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அவர்களைத் தலத் திருச்சபை மீண்டும் மீண்டும் அணுகிய பிறகே இம்முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர் என்று இப்பகுதி மக்களுக்குப் பணி புரியும் Monfort சபையின் சகோதரர் K J Markose கூறினார்.







All the contents on this site are copyrighted ©.