2011-02-16 16:09:03

கத்தோலிக்கர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட அமெரிக்காவின் மிக உயர்ந்த பட்டம்


பிப்.16,2011. உழைப்பாளர்களின் தலைவராக இருந்த கத்தோலிக்கர் ஒருவர் இச்செவ்வாயன்று வாஷிங்க்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் மிக உயர்ந்த பட்டம் ஒன்றைப் பெற்றார்.
76 வயதான John Sweeney, கல்லூரியை முடித்ததும் அவருக்குக் கிடைத்த IBM நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அகிலஉலக தையல் பெண்களின் கழகம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். பின்னர் இரு தொழிலாளர் சங்கங்களின் பொறுப்பாளராக 35 ஆண்டுகள் பணி செய்தார். அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்றத்திற்கான பணிக்குழுவின் ஆலோசகராகப் பணி புரிந்தார்.
இவரது பல்வேறு சேவைகளைப் பாராட்டி, அமெரிக்க அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமான Medal of Freedom அதாவது விடுதலைப் பதக்கம் என்ற சிறப்பை இச்செவ்வாயன்று அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா இவருக்கு வழங்கினார்.முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், ஜெர்மன் பிரதமர் அஞ்செலா மெர்கெல், தொழிலதிபரும் உலகப்பெரும் செல்வந்தருமான Warren Buffett ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.