2011-02-15 14:54:45

1. திருத்தந்தையை இவ்வியாழனன்று சந்திக்க உள்ளார் ரஷ்ய அரசுத்தலைவர்.


பிப் 15, 2011. இவ்வாரம் திருத்தந்தைக்கும் இரஷ்ய அரசுத்தலைவருக்கும் உரோம் நகரில் இடம்பெற உள்ள சந்திப்பானது, நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும் என்றார் இரஷ்யாவிற்கான திருப்பீடத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

இரு தலைவர்களுக்கும் இடையே இம்மாதம் 17ம்தேதி அதாவது இவ்வியாழனன்று இடம்பெற உள்ள சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட திருப்பீட தூதரகத்தின் முதன்மைச் செயலர் குரு Visvaldas Kulbokas, எந்தெந்த தலைப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என்பது தெளிவில்லை எனினும், ஏற்கனவே இருதரப்பினரிடையேயும் நிலவும் நல்லுறவுகளின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இது இருக்கும் என்றார்.

தற்போதைய இரஷ்ய அரசுத்தலைவர் Dmitry Medvedev 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம்தேதி திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்தே இரு நாடுகளிடையேயான அரசியல் உறவு முழுமையான அளவில் சீர்செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.