2011-02-14 15:55:25

சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளை ஒழிக்க முனையும் முயற்சிகள் இந்தியாவில் அதிகரிப்பு


பிப்.14,2011. இந்தியாவில் சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளை ஒழிக்க முனையும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள்.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார அவையினால் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகள் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய உச்ச நீதி மன்ற நீதிபதி சிரியாக் ஜோசப், சிறுபான்மையினருக்கான உரிமைகள் என்பது ஒரு பிறரன்பு நடவடிக்கையோ அல்லது சலுகையோ அல்ல, மாறாக அது இந்திய கலாச்சாரத்தின் பன்மை தன்மை மற்றும் உயிர்துடிப்பை பாதுகாப்பதாகும் என்றார்.

இதே கருத்தரங்கில் உரையாற்றிய டெல்லி உயர் மறைமாவட்ட பேராயர் வின்சென்ட் கொன்செசாவோ, இந்தியாவில் சிறுபான்மை சமுதாயம் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது குறித்த பல்வேறு உதாரணங்களை எடுத்தியம்பினார்.








All the contents on this site are copyrighted ©.