2011-02-09 15:43:15

இமயமலையின் பனி முகடுகள் வளர்ந்து வருகின்றன - GeoScience ஆய்வாளர்கள் கருத்து


பிப்.09,2011. இமயமலையின் பனி முகடுகள் கரைந்து வரவில்லை மாறாக, அவை வளர்ந்து வருகின்றன என்று Nature GeoScience என்ற அறிவியல் இதழ் கூறியுள்ளது.
இமயமலையின் பனி முகடுகள் அதிக வேகத்தில் கரைந்து வருவதாகவும், அவை முற்றிலுமாக 2035ம் ஆண்டுக்குள் கரைந்து விடும் என்றும் ஐ.நா. அறிக்கை கூறியதற்கு, இந்தத் துறையில் நிபுணரான இந்திய அறிவியலாளர் விஜய் ரைனா தன் மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார்.
புவி வெப்பமடைதலால் இமயமலையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கைக்குச் சரியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்று முனைவர் ரைனா கூறினார்.இமய மலையில் உள்ள பனி முகடுகள் உருகுவதற்குப் பதில், அவை மாற்றம் ஏதுமின்றி இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் பனி முகடுகள் வளர்ந்துள்ளதாகவும் GeoScience இதழின் சார்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளின் இரு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.