2011-02-08 15:33:06

கொரியத் திருச்சபை கருக்கலைப்புக்கு எதிராக நடவடிக்கை


பிப்.08,2011. தென் கொரியாவில் திருமணமாகாமல் குழந்தைப் பெற்றெடுக்கும் தாய்மார் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் அவர்களுக்கு உதவுமாறு கத்தோலிக்க நிறுவனங்களைக் கேட்டுள்ளது அந்நாட்டுத் திருச்சபை.

கொரியாவில் கருக்கலைப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் “புதிய வாழ்வுத் திட்டம்” என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ள கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் மனித வாழ்வு ஆணையத் தலைவர் ஆயர் Gabriel Chang Bong-hun, Myeongdong பேராலயத்தில் இத்திங்களன்று திருப்பலி நிகழ்த்தி இதனைத் தொடங்கி வைத்தார்.

இதில் மறையுறையாற்றிய ஆயர் Chang, வாழ்வைத் தேர்ந்தெடுப்பது வாழ்வை விரும்பும் கடவுளுக்கு ஏற்றதாகும், நாம் எல்லாரும் வாழ்வைப் பாதுகாத்து வாழ்வின் நற்செய்தியை அறிவிப்பவர்களாகச் செயல்பட வேண்டும் என்றார்.

இந்தத் திட்டத்தில், 15 திருச்சபை மற்றும் மனித வாழ்வுக்கு ஆதரவான குழுக்கள், திருமணமாகாதத் தாய்மார்க்குப் புகலிடம் அளிப்பதற்கு முன்வந்துள்ளன. மேலும், கத்தோலிக்க மருத்துவமனைகள் இத்தகையப் பெண்களுக்கு இலவசமாகப் பிரசவம் பார்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளிலும் கத்தோலிக்கப் பள்ளிகளிலும் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் ஆண்டுக்கு சுமார் 4,000 திருமணமாகாதப் பெண்கள் வீதம் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்








All the contents on this site are copyrighted ©.