2011-02-08 15:33:48

இந்தியாவில் நடுத்தரப் பிரிவு மக்களின் எண்ணிக்கை 27 கோடியாக உயரும்


பிப்.08,2011. இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடுத்தரப் பிரிவு மக்களின் எண்ணிக்கை சுமார் 27 கோடியாக அதிகரிக்கும் என்று (NCAER) என் சி ஏ இ ஆர் என்ற தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் நுகர்வோர் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போதைய நிலவரப்படி நாட்டில் 3 கோடியே 14 இலட்சம் நடுத்தரக் குடும்பங்கள் உள்ளன, தனிநபர் அடிப்படையில் நடுத்தரப் பிரிவினரின் எண்ணிக்கை 16 கோடியாக உள்ளது, இது 2015 மற்றும் 2016ம் ஆண்டில் 26 கோடியே 70 இலட்சம் அதிகரிக்கும், இதே காலத்தில் நடுத்தரக் நடுத்தரக் குடும்பங்களின் எண்ணிக்கை 5கோடியே 33 இலட்சமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆயினும் மொத்த மக்கள் தொகையில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை 13.1 விழுக்காடாகும். இது 2025ல் 37 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.