2011-02-07 15:24:25

இலங்கையில் தொடர்ந்து வரும் இயற்கைப் பேரிடர்களால் மேலும் 250000 பேர் வீடுகள் இழப்பு


பிப்.07,2011. இலங்கையில் தொடரும் கனத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மேலும் 2,50,000 பேர் வீடுகளை இழந்து வேறு இடங்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக இலங்கையில் தொடர்ந்து வரும் இயற்கைப் பேரிடர்களால் இதுவரை 12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் முகாம்களில் தங்கியுள்ள இம்மக்களை அண்மையில் சந்தித்தார் என்றும், அவர்களுக்கு 10,000 டாலர் நிதி உதவிகளை உடனடியாக அளிக்க உத்திரவிட்டார் என்றும் UCAN செய்தி கூறுகிறது.
இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற மடுமாதா ஆலயத்திலும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்களிலும் மக்கள் தங்கவைக்கப் பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.உள்நாட்டுப் போரினால் இடம் பெயர்ந்த இம்மக்கள், மீண்டும் இயற்கைப் பேரிடர்களால் இடம்பெயர்ந்து செல்லும் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் Manthai, Nanattan, Musali ஆகிய கிராமங்கள் உட்பட ஏழு கிராமங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் மன்னார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அந்தனி விக்டர் சூசை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.