2011-02-05 15:32:23

ஐ.நா.அகதிகள் அமைப்பு : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இடம் பெறும் மோதல்களில் 90,000 பேர் புலம் பெயரக்கூடும்


பிப்.05,2011. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் Mohmand இனப் புரட்சியாளர்க்கு எதிரான இராணுவ நடவடிக்கைத் தீவிரப்படுத்தப்பட்டால் இம்மாத இறுதிக்குள் 90,000 பேர் புலம் பெயரக்கூடும் என்று ஐ.நா.அகதிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக அளவில் அகதிகளின் உரிமைகளுக்கும் நல்வாழ்வுக்குமென உழைத்து வரும் UNHCR என்ற ஐ.நா.அகதிகள் அமைப்பு, அப் பகுதியில் இடம் பெறும் மோதல்களினால் ஏற்கனவே சுமார் 25 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று கூறியது.

பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இடம் பெற்ற மோதல்களினால் சுமார் பத்து இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் Mohmand இனத்தவர் சுமார் 1,40,000 பேர் என்று ஐ.நா. கூறியது.








All the contents on this site are copyrighted ©.