2011-02-03 15:39:00

'மக்களுக்கென்று காடுகள்' என்ற மையக் கருத்துடன் அகில உலகக் காடுகள் ஆண்டு ஆரம்பம்


பிப்.03,2011. நமது சுற்றுச் சூழலைக் காப்பதற்கும், மனிதர்களுக்கு, சிறப்பாக ஏழைகளுக்குத் தேவையான உணவு, எரிபொருள், மருந்துகள் ஆகியவை வழங்குவதற்கும் காடுகள் மிகவும் தேவை என்று ஐ.நா.நிறுவனம் கூறியுள்ளது.
'மக்களுக்கென்று காடுகள்' என்ற மையக் கருத்துடன் அகில உலகக் காடுகள் ஆண்டு இப்புதனன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
உலகில் தற்போது குறைந்தது 160 கோடி மக்கள் காடுகளை நம்பி வாழ்கின்றனர் என்றும், இவர்களில் 6 கோடி மக்கள் காடுகளிலேயே வாழ்கின்றனர் என்றும் ஐ.நா.வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இவைகள் அன்றி, உலகில் உள்ள 700 கோடி மக்களும் காடுகளை ஏதோ ஒரு வகையில் சார்ந்துள்ளோம் எனவே, காடுகளைக் காப்பது நம் அனைவரின் கடமை என்றும் நமது கடமைகளை இவ்வாண்டு முழுவதும் மனித சமுதாயத்திற்கு நினைவு படுத்துவதே ஐ.நா.வின் திட்டம் என்றும் ஐ.நா.அதிகாரி Jan McAlpine கூறினார்.







All the contents on this site are copyrighted ©.