2011-02-02 15:14:14

துறவியரின் வாழ்வு திருச்சபையின் சுற்றுச்சூழலுக்கு வாழ்வு கொடுப்பதாய் இருக்கின்றது – வத்திக்கான் அதிகாரி


பிப்.02,2011. தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, பணிகள் மற்றும் பிறரன்பு மூலம் அவரது அன்புக்குச் சாட்சியம் பகரும் அர்ப்பணிக்கப்பட்ட துறவியரின் வாழ்வு திருச்சபையின் சுற்றுச்சூழலுக்கு வாழ்வு கொடுப்பதாய் இருக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 2, இப்புதனன்று 15வது அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் நாள் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்தத் துறவிகளுக்கானப் பேராயச் செயலர் பேராயர் ஜோசப் தோபின், இந்நாள், துறவற வாழ்க்கையின் அழகையும் முக்கியத்துவத்தையும் விசுவாசிகளுக்கு நினைவுபடுத்துவதாய் இருக்கின்றது என்று கூறினார்.

உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அமேசான் பருவமழைக் காடுகள் அமைந்துள்ளது போன்று திருச்சபையின் சுற்றுச்சூழலுக்கு துறவற வாழ்வு அமைந்துள்ளது என்றும் பேராயர் தோபின் தெரிவித்தார்.

இந்தச் சர்வதேச துறவியர் நாள் 1997ம் ஆண்டு இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.