2011-02-02 15:19:28

ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை குறித்து தேசியப் புலனாய்வு நிறுவனம் விசாரிக்க வலியுறுத்தல்


பிப்.02,2011. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெற்ற வன்முறையில் தான் ஈடுபட்டதாக இந்து தீவிரவாதி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ள வேளை, அவ்வன்முறை குறித்து தேசியப் புலனாய்வு நிறுவனம் தனது விசாரணைகளைத் தொடங்குமாறு திருச்சபை மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓர் இராணுவ இரகசிய புலனாய்வு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மூத்த இராணுவ அதிகாரி Prasad Srikant Purohit என்பவரும் புதுடெல்லியிலுள்ள Abhinav Bharat என்ற அவரது குழுவும் கந்தமால் உட்பட பல இடங்களில் கிறிஸ்தவர்க்கெதிரானத் தாக்குதல்களில் கவனம் செலுத்தியது என்று வெளியிடப்ப்டடுள்ளது.

ஒரிசாவில் இரண்டு பேரைக் கொலை செய்ததாக Purohit ஒத்துக் கொண்டுள்ளார். இந்த அறிக்கை வெளியானதை வைத்துப் பேசிய Berhampur ஆயர் Sarat Chandra Nayak, இந்து தீவிரவாதக் குழுவின் உண்மையான நிறம் வெளிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்று கூறினார்

NIA என்ற தேசியப் புலனாய்வு நிறுவனம் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கென்று 2009ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.