2011-02-02 15:22:20

உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டவுள்ளவேளை, இளைய தலைமுறையில் கவனம் செலுத்த ஐ.நா. உறுதி


பிப்.02,2011. உலக மக்கள் தொகை இந்த 2011ம் ஆண்டின் இறுதியில் 700 கோடியை எட்டவுள்ளவேளை, உலக அளவில் வளர்ந்து வரும் இளைய தலைமுறை குறித்து கவனம் செலுத்தவிருப்பதாக UNFPA என்ற ஐ.நா.மக்கள் தொகை நிதியகத்தின் புதிய தலைவர் Babatunde Osotimehin கூறினார்.

ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பின் செயல்திட்டக் கூட்டத்தில் பேசிய Osotimehin, இளையோர் சக்தியிலும் அவர்களின் நலவாழ்விலும் பாலினச் சமத்துவத்திலும் கவனம் செலுத்துவது நாடுகள் பொருளாதாரத்தில் வளர்வதற்கு உதவும் என்றார்.

இன்று உலகில் 180 கோடி இளம் வயதினர் இருக்கின்றனர், இவர்கள் உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பாகமாக உள்ளனர், இவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர், இது அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் Osotimehin கூறினார்.

இந்த இளைய தலைமுறைக்கு ஆதரவும் அதிகம் தேவைப்படுகின்றது, அவர்கள் மாண்பு, ஈடுபாடு, சுதந்திரம் ஆகியவற்றுடன் வாழ விரும்புகிறார்கள் என்றும் ஐ.நா.அதிகாரி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.