2011-02-01 16:05:17

ப்ரெஞ்ச் அரசியல் அமைப்பு அவை : ஒரே பாலினத் திருமணங்களைத் தடை செய்திருப்பது அரசியல் அமைப்பை எந்த விதத்திலும் மீறுவதாக இல்லை


பிப்.01,2011. பிரான்சில் ஒரே பாலினத் திருமணங்களைத் தடை செய்திருப்பது அந்நாட்டு அரசியல் அமைப்பை எந்த விதத்திலும் மீறுவதாக இல்லை என்று ப்ரெஞ்ச் அரசியல் அமைப்பு அவை அறிவித்தது.

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான ஐக்கியமே திருமணம் என்று ப்ரெஞ்ச் அரசியல் அமைப்பின் 75 மற்றும் 144ம் எண்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏழு நீதிபதிகள் கொண்ட குழு.

எனினும் பிரான்சில் 2006ம் ஆண்டில் எடுத்த ஆய்வின்படி 58 விழுக்காட்டினர் ஒரே பாலினத் திருமணத்தை ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது.

பெல்ஜியம், ஹாலந்து, நார்வே, சுவீடன், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஒரே பாலினத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது








All the contents on this site are copyrighted ©.