2011-02-01 16:01:32

பாகிஸ்தானில் தீவிரவாத இசுலாமை எதிர்ப்பதற்கு “மௌனமாக இருக்கும் முஸ்லீம்களுக்கு” லாகூர் பேராயர் அழைப்பு


பிப்.01,2011. பாகிஸ்தானில் “மௌனப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை முஸ்லீம்கள்”, வளர்ந்து வரும் தீவிரவாத இசுலாமின் தாக்கத்திற்கு எதிராகப் பேச வேண்டியதற்கான நேரம் வந்துள்ளது என்று அந்நாட்டு லாகூர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா கூறினார்.

பாகிஸ்தானில் இஞ்ஞாயிறன்று அனுசரிக்கப்பட்ட தேசிய செப, தப மற்றும் உண்ணா நோன்பு நிகழ்வில் இவ்வாறு உரைத்த பேராயர் சல்தான்ஹா, இசுலாம் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி இசுலாமிய வாழ்வு முறையைத் திணித்தால், ஓர் இருண்ட எதிர்காலத்தைக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றார்.

இசுலாத்திற்காக எந்த ஒரு செயலைச் செய்பவர்கள் போற்றப்படுகிறார்கள் என்று கூறிய அவர், தேவநிந்தனை சட்டத்தை எதிர்த்த பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீரைக் கொலை செய்த மும்தாஜ் காத்ரி ஹீரோவாகப் பாராட்டப்படுவதைச் சுட்டிக் காட்டினார்.

இசுலாத்திற்காக இறந்தால் விண்ணக மகிமையைப் பெற முடியும் என்று சொல்லி பத்துக்கும் பதினெட்டு வயதுக்கும் உட்பட்ட சிறார் தயாரிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள், ஜிஹாத்தை ஊக்குவிக்கும் உபஇராணுவ தீவிரவாத அமைப்புகளில் இணைகிறார்கள் என்றும் பேராயர் கூறினார்







All the contents on this site are copyrighted ©.