2011-02-01 16:04:26

ஐ.நா.பொதுச் செயலர்: கற்பழிப்பு, போர்க் கருவியாகப் பயன்படுத்தப்படுவது, அமைதிக்கு இடையூறு


பிப்.01,2011. கற்பழிப்பு நடவடிக்கையை, ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அதிகாரத்துக்கானப் போராட்டக் கருவியாக நோக்குவதைத் தவிர்த்து கட்டுப்பாட்டுடன் செயல்பட உறுதி எடுக்கும் போது இக்குற்றத் தழும்பை ஒழிக்க முடியும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

“ஆயுதம் தாங்கிய மோதல்களில் பாலியல் வன்முறை” என்ற தலைப்பில் நடைபெறும் ஆப்ரிக்கக் கூட்டத்தையொட்டி எத்தியோப்பிய நாட்டு அதிஸ் அபாபாவில் நிருபர் கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் இவ்வாறு கூறினார்.

ஆயுதம் தாங்கிய மோதல்களில் இடம் பெறும் பாலியல் வன்முறைகளை நிறுத்துவதிலும் பெண்களுக்கு உரிமைகள் வழங்குவதிலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உலகில் முன்னேறி வரும் நாடுகளில் ஆப்ரிக்க நாடுகளும் உள்ளடங்கும் என்றார் அவர்.

1992க்கும் 95க்கும் இடைப்பட்ட காலத்தில் போஸ்னியாவில் சண்டை நடந்த போது 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் பெண்கள் கற்பழிப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என்று ஐ.நா.அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.